மேலும் செய்திகள்
பழனிசாமியின் பிரசாரம் ஒத்திவைப்பு
12-Aug-2025
திருப்பூர்; அ.தி.மு.க., பொதுச் செயலாளர் வருகையின் போது, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., வினர் மனு அளித்தனர். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, தொகுதிவாரியாக தேர்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அடுத்த மாதம் அவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் காங்கயம் தொகுதிகளில் பிரசாரப் பயணம் வரவுள்ளார். இந்நிலையில் அவரது வருகையின் போது, உரிய பாதுகாப்பும், கூட்ட நிகழ்வுகளுக்கு அனுமதியும் கேட்டு அக்கட்சியினர் மனு அளித்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட எஸ்.பி., ஆகியோரிடம் இது குறித்த மனுவை, எம்.எல்.ஏ..,க்கள், பொள்ளாச்சி ஜெயராமன், ஆனந்தன், விஜயகுமார் ஆகியோர் அளித்தனர். மாவட்ட மற்றும் மாநகர கட்சி மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள் உடனிருந்தனர்.
12-Aug-2025