பல்லடம் - சத்தி பஸ் பா.ஜ., வேண்டுகோள்
பல்லடம் : அரசு போக்குவரத்து கழக பல்லடம் கிளை மேலாளரிடம் பா.ஜ.,வினர் அளித்த மனு:பல்லடம்- - கொச்சி நெடுஞ்சாலை, கரடிவாவி, பாப்பம்பட்டி, போத்தனுார் வழியே கோவையை இணைக்கும் முக்கிய வழித்தடம். இவ்வழித்தட கிராமங்களில் இருந்து தொழில் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், அரசு, தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் கோவை செல்கின்றனர். சூலுார், சிங்காநல்லுார், ராமநாதபுரம் வழியாக சென்று, அங்கிருந்து, உக்கடம், போத்தனுார் செல்வது என்பது சிரமமானது.பல்லடம் -- கொச்சி ரோடு வழியாக, போத்தனுார், உக்கடம் செல்ல புறநகர் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இதேபோல், மங்கலம் வழியாக அவிநாசி செல்வதற்கு ஒரே ஒரு டவுன் பஸ் மட்டுமே உள்ளது.அவிநாசி, சேவூர் மற்றும் புளியம்பட்டி சந்தைகளுக்கு செல்லும் வகையில், பல்லடத்தில் இருந்து - சத்தியமங்கலம் வரையிலான புறநகர் பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.