உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடம் புறவழிச்சாலை; பழைய திட்டம் வேண்டாம்

பல்லடம் புறவழிச்சாலை; பழைய திட்டம் வேண்டாம்

திருப்பூர், ; பல்லடம் தாலுகா, கணபதிபாளையம், சுக்காம்பாளையம், மாதப்பூர், நாரணாபுரம், செம்மிபாளையம் ஊர் பொதுமக்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து நேற்று அளித்த மனு: கடந்த மே 30ம் தேதியிட்ட அரசாணைப்படி, பல்லடம் புறவழிச்சாலை என்.எச்., 81 விரைவில் அமைய இருப்பதாக தெரியவருகிறது. ஆனால், 9.9 கி.மீ., நீளமுள்ள புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரியும், அதற்கு மாறாக 13.85 கி.மீ., நீளமுள்ள மற்றொரு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த கோரியும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஒருதரப்பினர் மனு அனுப்பியுள்ளனர். ஏற்கனவே பரிசீலனையில் இருந்து பின் கைவிடப்பட்ட 13.85 கி.மீ., நீள புறவழிச்சாலை அமையும் வழித்தடத்தால், விவசாயிகள், குறு, சிறு தொழில்முனைவோராகிய நாங்கள் பாதிக்கப்படுவோம். ஊர் பொதுமக்கள் இணைந்து, அரசுக்கு தொடர் கோரிக்கை வைத்தும், கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து, அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது அதே பழைய திட்டத்தை செயல்படுத்தக்கோரி சிலர், மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ளனர். திட்டம் நிறைவேற்றப்பட்டால், பி.ஏ.பி., பாசன குறு, சிறு விவசாய நிலங்கள், கிணறு, ஆழ்துளை கிணறுகள், அரசு பள்ளி, கோவில்கள், தென்னை மரங்கள், விசைத்தறி, கோழிப்பண்ணைகள் பாதிக்கப்படும். எனவே, 13.85 கி.மீ., நீளத்துக்கு புறவழிச்சாலை அமைக்கும் பழைய திட்டத்தை பரிசீலிக்க கூடாது; அந்த திட்டத்தை கைவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை