உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடம் நகராட்சி கூட்டம்; பா.ஜ., கவுன்சிலர் வெளிநடப்பு

பல்லடம் நகராட்சி கூட்டம்; பா.ஜ., கவுன்சிலர் வெளிநடப்பு

பல்லடம்; கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, பா.ஜ., வார்டு கவுன்சிலர், பல்லடம் நகராட்சி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.பல்லடம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் அதன் தலைவர் கவிதாமணி தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி கமிஷனர் மனோகரன் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, பா.ஜ., 18வது வார்டு கவுன்சிலர் சசிரேகா கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:பகத்சிங் நகரில், பெண் களுக்கான கழிப்பிடம் கட்டித் தர வேண்டும் என, முதல் கவுன்சிலர் கூட்டத்திலேயே கோரிக்கை வைத்தும், இன்று வரை நிறைவேறவில்லை. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.மேலும், வடுகபாளையம்- சித்தம்பலம் செல்லும் ரோட்டில் உள்ள கழிவு நீர் கால்வாய் காணாமல் போனது. இதை சீரமைத்து தர வேண்டும். கதர் கடை, ஆதித்யா ஹோம்ஸ், மகிழம் அவென்யு குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் சரிவர செல்வதில்லை. இவற்றை சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்தும் இவையும் நிறைவேற்றப்படவில்லை.இவ்வாறு, வார்டு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பல கோரிக்கைகள் நீண்ட காலமாக நிறைவேறாமல் உள்ளன. எனவே, நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ