பன்பிட் சாம்பியன்ஷிப் போட்டிகள் : வெற்றி பெற்ற அணிக்கு பரிசு
உடுமலை: கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா கல்வி நிறுவனத்தில், 'பன்பிட் சாம்பியன்ஷிப்'-2025 போட்டிகள் நடந்தது. போட்டிகளை வித்ய நேத்ரா கல்வி நிறுவன முதல்வர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பத்தாம் வகுப்பு மாணவி காவியாஸ்ரீ வரவேற்றார். பள்ளியின் விளையாட்டுத்துறை செயலர் புவிநந்தன் உறுதிமொழி கூறினார். ஆர்.கே.வி., அமோசன் பப்ளிக், வேதாந்தா அகாடமி மற்றும் வித்ய நேத்ரா உள்ளிட்ட பள்ளி அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்றன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டதில், முதல் இடத்தை, ஆர்.கே.வி., பள்ளியும், இரண்டாம் இடத்தை வித்ய நேத்ரா பள்ளியும் பெற்றன. வெற்றி பெற்ற பள்ளி அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பத்தாம் வகுப்பு மாணவி விகாசினி நன்றி தெரிவித்தார்.