உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பேப்பர் லோடு ஏற்றிய லாரி விபத்து

பேப்பர் லோடு ஏற்றிய லாரி விபத்து

திருப்பூர்; ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து துாத்துக்குடிக்கு பேப்பர் லோடு ஏற்றி கொண்டு சரக்கு லாரி திருப்பூர் வழியாக சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு, புஷ்பா சந்திப்பு வளைவில் திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக பேப்பர் ரோல்கள் சரிந்து விழுந்து, லாரி விபத்துக்குள்ளானது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் எடிசன், 31 உயிர் தப்பினார். விபத்தில் சென்டர் மீடியனில் உள்ள மின்கம்பம் உள்ளிட்டவை சேதமடைந்தது. விபத்து குறித்து அறிந்து சென்ற கொங்கு நகர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் தலைமையிலான போலீசார், விபத்து ஏற்பட்ட லாரியை மீட்டு, ரோல்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மக்கள் உதவினர். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி