உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அபராதம் நிலுவை; பைக் பறிமுதல்

அபராதம் நிலுவை; பைக் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு அருகே போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த டூவீலரில் நம்பர் 'பிளேட்'டில் எண் இல்லாமலும், அதிக சத்தம் எழுப்ப கூடிய சைலன்சரும் பொருத்தப்பட்டு இருந்தது. போக்குவரத்து விதிமீறல் காரணமாக, டூவீலரை நிறுத்தி விசாரித்தனர். அனுப்பர்பாளையத்தில் தங்கி மெக்கானிக் வேலை செய்யும் திருவாரூரை சேர்ந்த அஸ்வின், 22 என்பது தெரிந்தது. விதி மீறல் காரணமாக, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.தொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல் சென்றது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக, 11 ஆயிரம் ரூபாய் அபராதம் நிலுவையில் இருப்பது தெரிந்தது. அபராத தொகையை செலுத்த அறிவுறுத்தி, டூவீலரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை