சீரமைத்த வீட்டுக்கு அபராதம்; குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு
பல்லடம்,; பல்லடம் அருகே வடுகபாளையம்புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் 53;இவர் தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். சேதமடைந்த வீட்டின் ஒரு பகுதியை இடித்து விட்டு, வீட்டை சீரமைத்து வந்த நிலையில், திடீரென வந்த மின்வாரிய பறக்கும் படை அதிகாரிகள், 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.இது குறித்து ஜெயபால் கூறியதாவது:கடந்த, 50 ஆண்டுக்கு மேலாக இங்கு வசிக்கிறோம். 516 சதுர அடி இடத்தில் உள்ள பழைய ஓட்டு வீட்டின் ஒரு பகுதி மிகவும் சேதமடைந்தது. இதையடுத்து, சேதமடைந்த பகுதியை மட்டும் இடித்து அகற்றிவிட்டு, அப்பகுதியில், புதிதாக ஆர்.சி., கட்டடம் கட்டப்பட்டது. பழைய ஓட்டு வீட்டில் குடியிருந்தபடியே, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தோம். இதற்கிடையே, ஆய்வுக்கு வந்த பறக்கும் படையினர், புதிதாக வீடு கட்டி வருவதாக நினைத்து, 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். 2 ஆயிரம் சதுர வரை எந்த நிபந்தனையும் தேவையில்லை என அரசே கூறியுள்ள நிலையில், 516 சதுர அடியில் சீரமைக்கப்பட்டு வரும் கட்டடத்துக்கு அபராதம் விதித்துள்ளது கவலை அளிக்கிறது. இது தொடர்பாக, தகவல்களை சேகரித்து, விரைவில், மின் வாரியம் மீது வழக்கு தொடர்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து பல்லடம் மின் வாரிய உதவி பொறியாளர் கிஷோரிடம் கேட்டதற்கு, ''பறக்கும் படையினர் அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், புதிதாக கட்டப்பட்ட வீடு என்பதால்தான் அபராதம் விதிகப்பட்டுள்ளது,'' என்றார்.