உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்

உடுமலை; உடுமலையில் ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றுள்ள ஓய்வூதியர்களுக்கு, உயர்த்தப்பட்ட பஞ்சப்படியை வழங்க வலியுறுத்தி,ஓய்வூதிய சங்கங்கள் உடுமலை ஒருங்கிணைப்பு குழுவினர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உடுமலை ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆசிரியர் செல்லதுரை தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சேதுராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், மின்வாரிய ஓய்வூதியர் சங்கம், அஞ்சல் துறை ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க தலைவர் நாச்சிமுத்து நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ