உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துர்நாற்றத்துடன் குடிநீர்   மக்கள் சாலைமறியல்

துர்நாற்றத்துடன் குடிநீர்   மக்கள் சாலைமறியல்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 36வது வார்டுக்கு உட்பட்டது சின்னான் நகர்; அப்பகுதியில், 150க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. அப்பகுதி மக்களுக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், துர்நாற்றத்துடன், கழிவுநீர் கலந்த குடிநீர் சப்ளை செய்வதாக கூறி, நேற்று இரவு, 7:30 மணிக்கு, அப்பகுதி மக்கள், சின்னான்நகர் ரோட்டில் அமர்ந்து, சாலைமறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கவுன்சிலர் வர வேண்டுமென அரைமணி நேரம் போராட்டம் தொடர்ந்தது. போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் நேரில் வந்து, மக்களை சமாதானம் செய்தார். மாநகராட்சி அதிகாரிகள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்ததை தொடர்ந்து, ஒரு மணி நேரம் நடந்த சாலைமறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை