உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொது இடத்தில் குப்பை கொட்டும் மக்கள்

பொது இடத்தில் குப்பை கொட்டும் மக்கள்

திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோடு, செங்குந்தபுரம் பகுதியில், குப்பைகள் வாங்கப்படாததால் பல தெருக்கள் ஒன்றுகூடும் பொது இடத்தில் மக்கள் குப்பை கொட்ட துவங்கினர். முன்பு அப்பகுதியில் கொட்டப்பட்டு வந்த குப்பைகள், அகற்றப்பட்டு துாய்மையானது. பிளக்ஸ் பேனர் வைத்து குப்பை கொட்டக்கூடாது என்றும் அறிவிப்பு இருந்தது. தற்போது மாநகராட்சி ஊழியர்கள் குப்பை வாங்குவதில்லை என்பதால் மக்கள் வேறு வழியில்லாமல் அவ்விடத்தில் மீண்டும் குப்பை கொட்ட துவங்கினர். ஒருவரைப் பார்த்து மற்றொருவர் என பலர் குப்பைகளை கொட்டுகின்றனர். அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது, இதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை