மேலும் செய்திகள்
சிவன்மலையில் பஸ்கள் நின்று செல்ல உத்தரவு
02-Nov-2025
காங்கயம்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, 25 ஆண்டுகளாக பாதயாத்திரை சென்று வந்த சுவாமியின் காளை மாடு உயிரிழந்தது, ஆரத்தொழுவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்டது ஆரத்தொழுவு ஊராட்சி. ஆரத்தொழுவு காவடிக்குழு, ஆண்டுதோறும் தைப்பூச நாளில் சிவன்மலைக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்டு வருகிறது. ஆரத்தொழுவு காவடி குழு சார்பில், சிவன்மலை ஆண்டவருக்கு சொந்தமான காங்கயம் இன காளை மாடுகளும் வளர்க்கப்படுகின்றன. தைப்பூச காவடி பாதயாத்திரையின் போது, சுவாமியின் காளை மாடும், அலங்கரிக்கப்பட்டு, பாதயாத்திரையாக வந்து, மலைமீது ஏறி, காவடி குழுவுடன் மலையை வலம் வருவது வழக்கம். கடந்த, 25 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட, சிவன்மலை ஆண்டவருக்கு சொந்தமான காளை மாடு, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தது. பக்தர்கள், ஊர்பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தி காளை மாட்டின் உடலை நல்லடக்கம் செய்தனர். காளை மாடு உயிரிழந்தது, கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவடிக்குழுவினர் கூறுகையில், 'எங்களுடன் வாழ்ந்து வந்த சிவன்மலை ஆண்டவர் காளை மாடு உயிரிழந்தது எங்களுக்கு மிகப்பெரிய சோகம். கடந்த, ஏழு ஆண்டுகளாக வளர்க்கப்படும் மற்றொரு காளை மாடு, இனி காவடி குழுவுடன் சிவன்மலை பாதயாத்திரையில் பங்கேற்கும்,'' என்றனர்.
02-Nov-2025