மேலும் செய்திகள்
சேதமடைந்த மின் கம்பம் புதிதாக அமைக்க கோரிக்கை
16-Dec-2024
அவிநாசி; அவிநாசி கிழக்கு ரத வீதியில் பழுதாகி பயன்பாட்டில் இல்லாத போக்குவரத்து சிக்னல் கம்பத்தால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து காத்திருக்கிறது.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட், கைகாட்டிப்புதுார் ரவுண்டானா அருகில், பழைய பஸ் ஸ்டாண்ட், சேவூர் ரோடு சந்திப்பில் மற்றும் கோவை ரோடு ஆகிய இடங்களில், தானியங்கி சிக்னல் கம்பங்களை போக்குவரத்து போலீசார் நிறுவியுள்ளனர்.அதில், அவிநாசியில் இருந்து சேவூர் ரோடு திரும்பும் சந்திப்பில் பாலசந்தர் மருத்துவமனை எதிரில் உள்ள சிக்னல் கம்பம் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.புதியதாக பொருத்தப்பட்ட சிக்னல் கம்பமும் அதன் அருகிலேயே செயல்பாட்டில் உள்ளதால், இதற்கு முன் பொருத்திய சிக்னல் கம்பத்தை அகற்றாமல் விட்டுவிட்டனர். பழைய கம்பம் அடிப்பகுதியில் துருப்பிடித்து, வலுவிழந்து காணப்படுகிறது.பலத்த காற்று வீசும் போது, கம்பம் சாய்ந்து ரோட்டில் விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து காத்திருக் கிறது. எனவே, ஆபத்தான் நிலையில், பயன்பாடின்றி உள்ள சிக்னல் கம்பத்தை அகற்ற அவிநாசி போக்கு வரத்து போலீசார் உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
16-Dec-2024