மேலும் செய்திகள்
கோள்கள் அணிவகுக்கும் வானியல் நிகழ்வு
21-Jan-2025
உடுமலை; வானில் கோள்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியை, உடுமலையில் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.வானில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் உள்ளிட்ட ஆறு கோள்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியை பல இடங்களிலும் பொதுமக்கள் பார்த்தனர்.உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், காந்திநகர் அருகே செல்லம் நகரில் தொலைநோக்கி வாயிலாக, பொதுமக்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், வானியல் நிகழ்வு, சூரிய குடும்பம், குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விளக்கமளித்தார். பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட 400க்கும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்தனர்.
21-Jan-2025