மேலும் செய்திகள்
மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்
18-Jun-2025
அவிநாசி : அவிநாசி அருகே வஞ்சி பாளையம் பகுதியில் மா.கம்யூ., கட்சி கிளைகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் சந்திப்பு வாகன பிரசார இயக்கம் நடந்தது.மேட்டுப்பாளையம் குடிநீரை வீடுகளுக்கு வழங்குதல், வஞ்சிபாளையம் பள்ளியை தரம் உயர்த்துதல், ஸ்ரீவாரி கார்டன், திருமுருகன்பூண்டி ஊராட்சி முருகம்பாளையத்தில் உள்ள சுரபி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள கழிவு நீரை வடிகாலில் இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இரு சக்கர வாகன பிரசார மக்கள் சந்திப்பு இயக்கம் பொன்ராமபுரத்தில் துவங்கி பல்வேறு இடங்களில் நடந்தது.
18-Jun-2025