உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பணி நிரந்தர அறிவிப்பு; பகுதி நேர ஆசிரியர் எதிர்பார்ப்பு

பணி நிரந்தர அறிவிப்பு; பகுதி நேர ஆசிரியர் எதிர்பார்ப்பு

திருப்பூர்; ''பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக, வரும், 15ம் தேதி சுதந்திர தின உரையில், முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும்'' என, தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் தலைமையில் வரும், 14ம் தேதி நடக்கிறது. இதை தொடர்ந்து, 15ம் தேதி சுதந்திர தின விழாவில், முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட உள்ளார். பொதுவாக, அமைச்சரவை கூட்டத்தில், அரசு திட்டங்கள், கொள்கை முடிவுகள், புதிய சட்டங்கள் குறித்து, விரிவாக ஆலோசிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்படுவது வழக்கம். தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியது போன்று, 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கிறோம். தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், 12 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தில் வீட்டு வாடகை, மருத்துவ செலவு, குழந்தைகளின் கல்வி, பெற்றோர் பராமரிப்பு உட்பட அடிப்படை செலவினங்களை ஈடுகட்ட முடியவில்லை. மே மாத சம்பளம் இல்லை. மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்புத் தொகை, போனஸ் போன்ற எவ்வித சலுகைகளும் இல்லை. பகுதி நேர ஆசிரியர்களின் நிலையறித்து, பணி நிரந்தர அறிவிப்பை, சுதந்திர தின உரையின் போது முதல்வர் வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !