உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெருந்துறை ஸ்ரீதேவி சிட்பண்ட்ஸ் திருப்பூரில் கிளை திறப்பு விழா

பெருந்துறை ஸ்ரீதேவி சிட்பண்ட்ஸ் திருப்பூரில் கிளை திறப்பு விழா

திருப்பூர்: பெருந்துறையை தலைமையிடமாக கொண்ட ஸ்ரீதேவி சிட்பண்ட்ஸ், மூன்றாவது கிளையை, திருப்பூர், 60 அடி சாலையில் கனரா வங்கி எதிரில் திறந்துள்ளது. துவக்க விழாவுக்கு இதன் நிர்வாக இயக்குனரும், ஈரோடு மாவட்ட சிட்பண்ட்ஸ் அசோசியேசன் தலைவருமான எஸ்.கே.ராமசாமி தலைமை வகித்தார்.இதன் இயக்குனர் பிரபு ராமசாமி வரவேற்றார். சஷ்டி பாலா கார்டன்ஸ் ராமகிருஷ்ணன் பங்கேற்று புதிய கிளையைத் திறந்துவைத்தார். ஸ்ரீஅன்னை அசோசியேட்ஸ் சண்முகப்பிரியா நவநீத கண்ணன் குத்துவிளக்கேற்றினார். ஸ்ரீதேவி சிட்பண்ட்ஸ் இயக்குனர் கூறுகையில், ''கடந்த 1984ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம் 40 ஆண்டுகளாக வாடிக்கையாளருக்கு திருப்தியளிக்கும் வகையில் செயல்படுகிறது. 2 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை ஏலச்சீட்டுகளை அரசு பதிவு பெற்று நடத்தி வருகிறோம். ஏற்கனவே கோவையில் கிளை அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது திருப்பூரில் மற்றொரு கிளையைத் துவக்கியுள்ளோம்' என்றனர்.இதன் இயக்குனர் சிபிவர்மன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை