மேலும் செய்திகள்
தட்டுக்கு வருவதெல்லாம் கெட்டுப்போன இறைச்சியா?
30-Sep-2024
திருப்பூர் : அவிநாசியில் தனியார் மருத்துவமனை அருகே, சுகாதாரமற்ற முறையில் இயங்கும் இறைச்சி கடையை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் கலெக்டரிடம், அவிநாசியை சேர்ந்த வக்கீல் சத்தியமூர்த்தி என்பவர், அளித்த மனு:அவிநாசி பேரூராட்சி, முத்துச் செட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை எதிரே, குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் இரு இறைச்சி கடைகள் உள்ளன. பேரூராட்சி அனுமதித்த இடத்தை விட்டு இங்கு கடைகள் செயல்படுகிறது. சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகள் விற்பனை செய்வது, இறைச்சி கழிவுகளை சாக்கடையில் எறியும் நிலையும் உள்ளது. இதனால், சுற்றுப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த் தாக்குதல் அபாயம் உள்ளது. எனவே, இக்கடைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
30-Sep-2024