மாணவர்களுக்கு போன் பழுது பார்த்தல் பயிற்சி
உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில்,கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில், மாணவர்களுக்கு 'மொபைல் போன் பழுது பார்ப்பது' குறித்து பயிற்சி பட்டறை நடந்தது.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் நடந்த பயிற்சியில் மொபைல் குறித்த தகவல்கள், அதிலுள்ள பாகங்கள், சரிசெய்து பழுது நீக்குவது, பாதுகாப்பாக மொபைல்போன் பயன்படுத்துவது குறித்து, பயிற்சியாளர் கிருஷ்ணகுமார் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத்தலைவர் கார்த்திகேயன், பேராசிரியர்கள் செய்திருந்தனர். கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார். பயிற்சி பட்டறையில், 200க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.