உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திட்டமிட்டு முள்ளங்கி சாகுபடி; கைகொடுக்கும் வருவாய் 

திட்டமிட்டு முள்ளங்கி சாகுபடி; கைகொடுக்கும் வருவாய் 

உடுமலை; சமவெளிப்பகுதிகளில், பருவமழை சீசனுக்கு முன் அறுவடை செய்யும் வகையில், முள்ளங்கி சாகுபடியை திட்டமிட்டு, உடுமலை வட்டார விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.உடுமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் விளைபொருட்களை உடுமலையில் உழவர்சந்தை, சந்தைக்கு கொண்டு வந்து சந்தைப்படுத்துகின்றனர்.இந்நிலையில், மலைப்பகுதிகளில் மட்டும் விளைவிக்கப்பட்டு வந்த, காலிபிளவர், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை, சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சமவெளிப்பகுதிகளிலும் சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர்.குறிப்பாக உடுமலை வட்டாரத்தில், ஆண்டியகவுண்டனுார், குட்டியகவுண்டனுார், எலையமுத்துார் சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு முள்ளங்கியை கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி செய்கின்றனர்.செப்., மாதத்தில் நடவு செய்து வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் முன், முள்ளங்கியை அறுவடை செய்கின்றனர். இவ்வாறு, திட்டமிட்டு நடவு செய்வதால், நிலையான வருவாயும் கிடைக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு முறை முள்ளங்கி சாகுபடி செய்து வருகிறோம். இச்சாகுபடியில், நாற்றுகளை வாங்கி நடவு செய்யும் முறையை பின்பற்றுகிறோம்.சிலர் விதைகளை நேரடியாக விதைப்பு செய்கின்றனர். செடிகளை முறையாக கண்காணித்து பூச்சி தாக்குதலுக்கு உரிய நேரத்தில், மருந்து தெளிக்க வேண்டும். சாகுபடியில், 40 - 60 நாட்களுக்குள் முள்ளங்கியை அறுவடை செய்து, 20 கிலோ கொண்ட பைகளில் நிரப்பி, உடுமலை மற்றும் இதர சந்தைகளில் விற்பனை செய்கிறோம்.இதன் வாயிலாக நிலையான வருவாயும் கிடைக்கிறது. உழவர் சந்தையில், கிலோ 30 - 35 ரூபாய்க்கு முள்ளங்கி விற்பனையாகிறது. சீதோஷ்ண நிலை ஒத்து போனால், நல்ல விளைச்சல் கிடைக்கும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ