மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் நட்டு மாணவர்கள் பராமரிப்பு
26-Mar-2025
உடுமலை; திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில், மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.பொள்ளாச்சியிலிருந்து உடுமலை வழியாக திண்டுக்கல்லுக்கு, நான்கு வழிச்சாலை அமைக்க, கடந்த, 2018ல், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கியது.திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் - மடத்துக்குளம், மடத்துக்குளம் - பொள்ளாச்சி என மூன்று பிரிவுகளாக பிரித்து பணி நடந்தது. இதில், பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ளது.உடுமலை அருகே பல்லடம் மற்றும் தாராபுரம் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே, உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது. இருப்பினும், நான்கு வழிச்சாலையில், போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில், மையத்தடுப்பில், அரளி செடிகள் வைத்து பராமரித்து வருகின்றனர்.அடுத்தகட்டமாக, நான்கு வழிச்சாலை ஓரமாக, மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. தற்போது, உடுமலையில் இருந்து பழநி வரை மரக்கன்றுகள் நட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
26-Mar-2025