தேச ஒற்றுமை காக்க உறுதிமொழி
திருப்பூர், லட்சுமி நகர், மஸ்ஜிதே அமிரியா சுன்னத்வல் ஜமாத் பள்ளி வாசல், மஸ்ஜிதே ராஹ்மதல் அறக்கட்டளை சார்பில் நேற்று குடியரசு தினம் முன்னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. புது பஸ் ஸ்டாண்ட், கோல்டன் நகர் பகுதிகளில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பூர் ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது ரபிக் தலைமை வகித்தார். செயலாளர் முகமது ஹசன், பொருளாளர் அஜமத்துல்லா முன்னிலை வகித்தனர். தேச ஒற்றுமை காப்போம்; அரசியல் சட்ட உரிமையை காப்போம் என உறுதி மொழி ஏற்கப்பட்டது.