உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரதமர் மோடி பிறந்த நாள் விழா; பா.ஜ. சார்பில் மருத்துவ முகாம்

பிரதமர் மோடி பிறந்த நாள் விழா; பா.ஜ. சார்பில் மருத்துவ முகாம்

திருப்பூர்; திருப்பூர் மாநகரில், பா.ஜ. சார்பில் எட்டு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பா.ஜ. திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில், எட்டு இடங்களில் நடந்தது. அதன் ஒரு பகுதியாக, செரங்காடு மண்டல் தலைவர் மந்திராசலமூர்த்தி ஏற்பாட்டில் ரேவதி மருத்துவமனை மற்றும் தி ஐ பவுண்டேசன் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் கார்த்திக், தொழில் பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை