உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு மருத்துவமனையில் போலீஸ் கமிஷனர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் போலீஸ் கமிஷனர் ஆய்வு

திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று திடீர் ஆய்வு கொண்டார்.நாள் ஒன்றுக்கு எவ்வளவு பேர் புறநோயாளிகள் வருவர், உள்நோயாளிகளாக எவ்வளவு பேர் சிகிச்சை பெறுகின்றனர், இவர்களில் பெண்கள், குழந்தைகள் எத்தனை பேர் இருப்பர், மருத்துவமனை பணியாளர், செவிலியர், ஊழியர் எண்ணிக்கை, எப்படி சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர், இரவு காவலர்கள் எத்தனை பேர், எவ்வளவு நேரம் பணியில் உள்ளனர் உள்ளிட்ட விபரங்களை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 'டீன்' முருகேசனிடம் கேட்டறிந்தார்.கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:பொறுப்பேற்ற பின், மக்கள் அதிகளவில் கூடும் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கை எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறேன்.மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு, 2000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இங்குள்ள பாதுகாப்பு குறித்து ஆராய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மருத்துவமனை வெளிவளாகம், உள் வளாகம் மற்றும் வார்டு பகுதியில் தேவையில்லாதவர்கள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க ஏதுவாக கேமராக்கள் உள்ளது.குற்றச் செயல்கள், விரும்பதகாத நிகழ்வுகளை தடுக்க, மேலும் கூடுதலாக 50 கேமராக்கள் பொருத்தப்படும். அவுட் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் எந்நேரமும் பணியில் இருப்பர். நோயாளிகள் தங்களுக்கு பிரச்னை என்றால், தயக்கமின்றி, உடனடியாக புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை