உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ரேஷன் கடையில் பெண்ணுக்கு மிரட்டல் :மர்ம நபர்கள் மீது போலீசில் புகார் 

 ரேஷன் கடையில் பெண்ணுக்கு மிரட்டல் :மர்ம நபர்கள் மீது போலீசில் புகார் 

திருப்பூர்: ரேஷன் கடைக்கு பொருள் வாங்க வந்த பெண்ணை மிரட்டியதாக கடையிலிருந்த நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. திருப்பூர் அருகே பெரிய பொம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சாந்தி, 53. இவர் காலேஜ் ரோடு, ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றுள்ளார். தனது ரேஷன் கார்டுக்கு பொருள் கேட்டுள்ளார். அடுத்த பகுதி கடைக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளனர். அங்கும் மறுத்த காரணத்தால் திரும்ப அதே கடைக்குச் சென்று விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக அங்கிருந்த ஊழியர்கள் பேசியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்த சாந்தி, இருவரையும் கடை ஊழியர்கள் தானா, அடையாள அட்டை யைக் காட்டுங்கள் என்று கேட்டார். அப்போது அவரிடம் கடுமையாகப் பேசிய இருவரும் சாந்தியை மிரட்டியதோடு தாக்கவும் முற்பட்டனர். இது குறித்து, அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் சாந்தி கூறுகையில், ''இந்த கடையில் சம்பந்தமில்லாத நபர்கள் தான் பணி செய்கின்றனர். இது குறித்து புகார் தெரிவிக்க தொடர்பு கொண்ட போது, உரிய அதிகாரிகள் யாரும் சரியாக பதில் தரவில்லை. எனது போன் அழைப்பையும் ஏற்கவில்லை. வேறு வழியின்றி போலீசில் புகார் அளித்தேன்,'' என்றார். இது குறித்து விளக்கம் பெற வளர்மதி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் புவனேஸ்வரியை பல முறை போனில் தொடர்பு கொண்டும் அழைப்பை ஏற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ