மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்: குட்கா பறிமுதல்
09-Nov-2025
போதை மாத்திரை; வாலிபர் கைது
16-Oct-2025
வெள்ளியங்காடு, தலைவர் தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ், 58; இவருக்கு வலிப்பு நோய் உள்ளதால், வீட்டில் இருந்து வந்தார். நேற்று மதியம் அப்பகுதியில் நடந்து சென்றார். நாச்சியார் பாடசாலை அருகே சென்ற போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு, பாதாள சாக்கடையில் விழுந்தார். அதில், தலையில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்றவர் கைதுமங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த நபரிடம் விசாரித்தனர். அதில், ராஜேஷ், 45 என்பதும், விற்பனைக்காக கஞ்சா பொட்டலத்தை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மூதாட்டி தற்கொலை பெருந்தொழுவு சிவசக்தி நகர் ஆறுமுகம் மனைவி முத்துலட்சுமி, 88. பேரன் தீனதயாளன் பராமரிப்பில் இருந்து வந்தார். அதிக மூட்டு வலி இருந்ததாக தெரிகிறது. திருமண நிகழ்ச்சிக்கு அனைவரும் சென்று விட்டனர். தனியாக இருந்த அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். 63 கிலோ குட்கா சிக்கியது வீரபாண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பல்லடம் ரோடு வித்யாலயா ஆத்தா தோட்டம் அருகே போலீசார் ரோந்து மேற்கொண்டார். சந்தேகப்படும் வகையில் இருந்த நபரிடம் விசாரித்தனர். நெல்லையை சேர்ந்த மாயபெருமாள், 42 என்பதும், விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, 63 கிலோவை பறிமுதல் செய்தனர். மது பாட்டில்கள் பறிமுதல் சென்ட்ரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குளத்துப்புதுார் மற்றும் ஆண்டிபாளையம் 'டாஸ்மாக்' மதுக்கடை பார் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது. இரு இடங்களில் ரோந்து மேற்கொண்டு கண்காணித்த போலீசார், 52 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, வேலாயுதம், 34, அமுதா, 50 ஆகியோரை கைது செய்தனர்.
09-Nov-2025
16-Oct-2025