| ADDED : ஜன 11, 2024 07:06 AM
சாலை மறியல்; 20 பேர் கைது: காங்கயம் பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 20 பேரை போலீசார் கைது செய்தனர்.புரோட்டா மாஸ்டர் தற்கொலை: திருச்சியை சேர்ந்தவர் சுப்ரமணி, 25. இவர் காங்கயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மது அருந்தினர். போதையில் வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.43 ஆடுகளை திருடியவர் கைது: வெள்ளகோவில், கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சாமியாத்தாள் என்பவரின் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளில், 15 ஆடுகளை மர்ம நபர் திருடி சென்றார்.அதேபோல், புள்ளசெல்லிபாளையத்தை சேர்ந்த கோகுல்குமாருக்கு சொந்தமான, 28 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரித்தனர். அதில், கரூர், மணல்மேடு பகுதியில் நடந்த ஆட்டு சந்தையில், திருடப்பட்ட ஆடுகள் விற்க கொண்டு சென்ற மூலனுார், எடைக்கல்படியை சேர்ந்த கார்த்திக்கை கைது செய்தனர்.