உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

குண்டாஸ் பாய்ந்தது

திருப்பூர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணா சந்திர நாயக், 41 என்பவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

கஞ்சா பறிமுதல்

வீரபாண்டி போலீசார், நேற்று இடுவம்பாளையம் அருகே லலித்குமார், 20 என்பவரிடம் சோதனை செய்தபோது, அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குட்கா சிக்கியது

திருப்பூர் வடக்கு போலீசார், ரயில்வே ஸ்டேஷன் அருகே சோதனை நடத்தினர். அலி உசேன், 23 என்பவரிடம் விசாரணை நடத்தியதில், அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட, 1.100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

லாட்டரி விற்றவர் கைது

திருப்பூர், பார்க் ரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில், மணிகண்டன், 54 என்பவர், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை