போலீஸ் ஸ்டேஷன் தடுப்புச்சுவர் டமார்
அவிநாசி; சேவூர் காவல்நிலைய சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. சேவூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்டு, ஏராளமான கிராமங்கள் உள்ளன. புளியம்பட்டி, நம்பியூர், சத்தி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வழித்தடமாகவும் சேவூர் இருப்பதால், மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவ்வப்போது, குற்ற சம்பவமும் நடப்பதுண்டு. இங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. ஊருக்கெல்லாம் பாதுகாப்பு தந்துகொண்டிருக்கும் போலீசார் பணிபுரியும் போலீஸ் ஸ்டேஷன் சுற்றுச்சுவரே இடிந்திருப்பது, அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.