உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாக்காளர் படிவம் வழங்குவதில் அரசியல் மக்கள் மறியல் முயற்சி: போலீசார் சமரசம்

வாக்காளர் படிவம் வழங்குவதில் அரசியல் மக்கள் மறியல் முயற்சி: போலீசார் சமரசம்

பல்லடம்: தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, தேர்தல் பிரிவு மூலம் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம், வாக்காளர்களின் விவரங்களை சேகரிப்பதற்கான படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு தோறும் சென்று, வாக்காளர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த படிவத்தை வழங்குவதில் 'அரசியல்' இருப்பதாக கூறி, பல்லடம் அருகே, அறிவொளி நகர் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்பகுதியினர் கூறுகையில், 'படிவங்களை வீடு தோறும் சென்று பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் உள்ள சில அரசியல் கட்சியினருக்கு, படிவங்கள் மொத்தமாக வழங்கப்பட்டுள்ளன. எனவே, இதில் 'அரசியல்' இருப்பதாக கருதுகிறோம். எனவே, வீடுதோறும் சென்று படிவங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். முன்னதாக, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பேச்சுவார்த்தை நடத்திய பல்லடம் போலீசார், 'படிவங்கள் பூர்த்தி செய்யும் பணியே சமீபத்தில் தான் துவங்கியது. எனவே, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கட் டாயம் வீடுகளுக்கே வந்து படிவங்களை பூர்த்தி செய்வர்,' என்றதும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஒற்றை ஆளாக படிவம்: கொடுக்கும் பி.எல்.ஓ.க்கள்: தேர்தல் கமிஷன் வாக்காளர் தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் பூத் ஏஜன்ட்களை நியமித்து அலுவலர்களுடன் செல்ல அறிவுறுத்தி இருந்தனர். பி.எல்.ஓ.,க்களாக உள்ள சத்துணவு அமைப்பாளர்கள் வாக்காளர்களை சந்தித்து சார் படிவங்களை வழங்கி வருகின்றனர். பொங்கலுார் வட்டார கிராமப்புறங்களில் அரசியல் கட்சியினர் சார் படிவம் வினியோகம் செய்யும் அலுவலருடன் செல்வதற்கு விரும்புவதில்லை. கட்சித் தலைவர்களின் அறிவுரையை ஏற்று செயல்பட்டால் மாதக்கணக்கில் அவர்களு டன் செல்ல வேண்டும். இதற்காக தங்கள் வருமானத்தை தியாகம் செய்ய வேண்டி வரும் என்ற மனநிலைதான், பூத் ஏஜன்ட்களிடம் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை