மேலும் செய்திகள்
வீடுகளுக்கு 'விசிட்' அடிக்கும் விஷ ஜந்துக்கள்!
14-Oct-2024
அனுப்பர்பாளையம் : திருப்பூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 14 ஆண்டுகள் ஆகியும் அதனுடன் இணைக்கப்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் என்பது ஆமை வேகத்தில்தான் நடந்து வருகிறது. பல இடங்களில் ரோடு, சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் மழை நேரங்களில் ரோடுகளில் தண்ணீர் தேங்குவது, மழைநீர் வீட்டுக்குள் புகுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.* அங்கேரிபாளையத்தில் இருந்து, பிச்சம்பாளையம் செல்லும் சந்திப்பு பகுதியில் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதி கழிவுநீர் செல்ல சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் குறுக்கே நான்காவது குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. மழை நேரங்களில் நீர் செல்ல குடிநீர் குழாய் இடையூறாக இருப்பதால், மழைநீர் சிறு பாலத்தை விட்டு வெளியேறி ரோட்டில் குளம்போல் தேங்கி பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. முறையான திட்டமிடல் இல்லாததால் இந்த நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் சிறு பாலத்தை உடைத்து மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.* மாநகராட்சி, 25வது வார்டு எஸ்.பி., நகர் மற்றும் ரங்கநாதபுரம் ஏ.டி., காலனியில் இப்பகுதி நகராட்சியாக இருந்தபோது, கட்டப்பட்ட குறுகிய சாக்கடை கால்வாயே உள்ளது. மழை நேரங்களில் அடித்து வரப்படும் மழைநீர் சாக்கடை கால்வாயை விட்டு வெளியேறி அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. கால்வாயை விரிவு படுத்த கோரி அப்பகுதி பொது மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மாநகராட்சி பாரா முகத்தில் உள்ளது.* மாநகராட்சி, 15வது வார்டு ஸ்ரீநகர் பகுதியில் மழைநீர் வடிகால் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணி நடப்பதால் மழை நீர் கால்வாயில் செல்ல முடியாமல் ரோட்டுக்கு வரும் நிலை ஏற்படுகிறது.இந்த பிரச்னைகளை போல, மாநகராட்சி பகுதியில் நடக்கும் பணி பல இடங்களில் தொடர்ந்து நடப்பதில்லை. ஆமை வேகத்தில், காலம் கடத்தி செய்கின்றனர். பல இடங்களில் அரைகுறையாக பணியாக கிடப்பில் போட்டுள்ளனர். இவ்வாறான மந்த நிலையால் மழை காலத்திற்குள் முடிக்க வேண்டிய பல பணிகள் முடிக்காமல் உள்ளதால், மழைநீர் தேங்கும் நிலைக்கு காரணமாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.---ஸ்ரீநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.-----திருப்பூர், அவிநாசி சாலையில் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.--அங்கேரிபாளையத்தில் இருந்து, பிச்சம்பாளையம் செல்லும் சந்திப்பு பகுதியில் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு கழிவுநீர் செல்ல சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீரை வெளியேற்றுவதற்காக சிறுபாலம் உடைக்கப்படுகிறது.----
திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகரில் செல்லும் சாக்கடை கால்வாயில் தடுப்பு உடைந்து ரோடு அரித்து போய் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. மழைக்காலங்களில் கழிவு நீருடன் மழைநீர் கால்வாயை விட்டு வெளியேறி ரோட்டில் குளம்போல் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில், மழைநீர் தேங்கி நின்றதால் அவ்வழியாக பைக்கில் சென்ற முதியவர் நிலை தடுமாறி சாக்கடை கால்வாயில் விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு காப்பாற்றினர். தற்போது போலீசார் ரோட்டில் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் தடுப்பு வைத்துள்ளனர்.
14-Oct-2024