மேலும் செய்திகள்
கோவை புறநகரில் கோவில் விழாக்கள் கோலாகலம்
10-Apr-2025
பல்லடம்; பல்லடம், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா நடந்தது.கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு, 8ம் தேதி முதல் விசேஷ அபிஷேக, ஆராதனைகள் துவங்கின. கிராம சாந்தி பூஜை, அம்மை அழைத்தல் நிகழ்வுகள் நடந்தன. பெண்கள், மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்து வந்தனர். நேற்று காலை, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊர் பொதுமக்கள், பெண்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மன் திருவீதி உலா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
10-Apr-2025