உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தேர்தலுக்கு பின் சம்பள பேச்சு

 தேர்தலுக்கு பின் சம்பள பேச்சு

அனுப்பர்பாளையம்: ''சட்டசபை தேர்தல் முடிந்தபின், பாத்திரத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும்'' என்று பாத்திர உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர். திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதி, பாத்திர உற்பத்திக்குப் புகழ் பெற்றது. பாத்திர தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கடந்த 2023 ஜனவரியில் போடப்பட்ட சம்பள ஒப்பந்தம் வரும் 31ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. உற்பத்தியாளர்களுக்குதொழிற்சங்கம் கடிதம் புதிய சம்பள ஒப்பந்தம் குறித்த, பாத்திர அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. எவர்சில்வர் பாத்திரங்களுக்கு 50 சதவீதமும், பித்தளை, செம்பு பாத்திரங்களுக்கு 60 சதவீதமும், ஈயப்பூச்சு அயிட்டங்களுக்கு 70 சதவீதமும் கூலி உயர்வு கேட்டு பாத்திர உற்பத்தியாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. தொழிற்சங்கத்தினருக்குகடிதம் எழுத முடிவு இதையடுத்து, எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகக் குழு கூட்டம் நேற்று அனுப்பர்பாளையம் சங்க அலுவலகத்தில் நடந்தது. தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். செயலாளர் தர்மமூர்த்தி முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். துணை தலைவர் குமாரசாமி, துணை செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், தேர்தல் முடிந்தவுடன் இரு தரப்பினரும் கலந்து கூலி உயர்வு குறித்து பேசி நல்ல முறையில் தீர்வு காணலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்ட முடிவை தொழிற்சங்கத்திற்கு கடிதம் மூலம் தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை