உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தபால் ஆபீஸ் சர்வர் பிரச்னை :சமூக ஆர்வலர்கள் ஆவேசம்

தபால் ஆபீஸ் சர்வர் பிரச்னை :சமூக ஆர்வலர்கள் ஆவேசம்

பல்லடம்: தபால் துறை சர்வர் புதுப்பிக்கப்பட்டு வரும் பணி நடந்து வருவதாக கூறி, கடந்த சில மாதங்களாகவே, சர்வர் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனால், தபால் துறையின் பல்வேறு சேவைகளும் பாதிக்கப்பட்டு, பொதுமக்களும் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகின்றனர். இது குறித்து, பல்லடம் வட்டார சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அரசு அலுவல் பணிகள், கோர்ட் வழக்கு விசாரணைகள், தகவல் அரியும் உரிமை சட்டம், தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகவும், தபால் துறை சேவைகள் பயன்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக, சர்வர் பிரச்னையால், தபால் துறை சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எப்போது கேட்டாலும் சர்வர் கோளாறு என்ற ஒரே பதிலையே திரும்பத் திரும்ப அலுவலர்கள் கூறி வருகின்றனர். சர்வர் பிரச்னை என்றால், அதற்கு மாற்று தீர்வை ஏற்பாடு செய்ய வேண்டும். இதனை தவிர்த்து, பொதுமக்களை அலைக்கழிப்பது முரணானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி