உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரி சுவரில் போஸ்டர்; சமூக ஆர்வலர்கள் புகார்

கல்லுாரி சுவரில் போஸ்டர்; சமூக ஆர்வலர்கள் புகார்

பல்லடம்; பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:பல்லடம் அரசு கல்லுாரி சுவரில், தி.மு.க., சார்ந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது மாணவர்கள் மத்தியில் அரசியலை புகுத்துவதாக உள்ளது. விதிமுறைகளை மீறி, கல்லுாரி சுற்றுச்சுவரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு கல்லுாரி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனால், எதிர்காலத்தில, பிற கட்சியினரும், அரசு சுவர்களின் போஸ்டர்கள் ஒட்டுவர்.எனவே, விதிமுறை மீறி, அரசு சுவற்றில் போஸ்டர்கள் ஒட்டிய தி.மு.க,வினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சுவற்றில் உள்ள போஸ்டர்களை அகற்றுவதுடன், எதிர்காலத்தில் இது போன்ற விதிமீறல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி