உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடைபாதையில் படுகுழி பாதசாரிகளுக்கு ஆபத்து

நடைபாதையில் படுகுழி பாதசாரிகளுக்கு ஆபத்து

பல்லடம்: பல்லடம், -தாராபுரம் ரோடு, கள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, நடைபாதையில் படுகுழி ஏற்பட்டுள்ளது. தாராபுரம் ரோடு சமீபத்தில்தான் நான்கு வழிச்சாலையாக புதுப்பிக்கப்பட்டு, இதனுடன் தேவையான இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இவ்வாறு, கள்ளிப் பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகாலின் சிமெண்ட் சிலாப் உடைந்து கம்பிகள் வெளியே நீட்டி கொண்டுள்ளன.இதனால், நடைபாதையில் மிகப்பெரும் படுகுழி உருவாகி உள்ளது. இது இவ்வழியே செல்லும் பாதசாரிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழை நீர் நிரம்பி, படுகுழி இருப்பது தெரியாமல் யாரேனும் உள்ளே விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.நெடுஞ்சாலைத்துறை மூலம் சமீபத்தில் நடந்த ரோடு பணியின் போது தான் இந்ந மழை நீர் வடிகால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட சில நாட்களிலேயே சிமெண்ட் சிலாப் உடைந்து படுகுழி உருவாகியுள்ளது. தரமற்ற கட்டுமான பணி இதற்கு காரணமா? அல்லது யாரேனும் சேதப் படுத்தினார்களா என்று தெரியவில்லை. விபத்து அபாயம் இருப்பதால், உடனடியாக சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !