விசைத்தறி உரிமையாளர்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
பல்லடம்: பல்லடத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடந்த ஓராண்டாக நடந்து வரும் கூலி ஒப்பபந்த பேச்சுக்கு வரமறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி அனைத்து விசைத்தறி கூடங்கள், வீடுகள் அருகே கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த கட்டமாக சங்க முடிவின் படி, பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.