பிரயாக்ராஜ் மகா கும்பமேளா; கோவை வழியாக சிறப்பு ரயில்
திருப்பூர்; உ.பி., மாநிலம், பிரயாக்ராஜ், திரிவேணி சங்கமத்தில் ஜன., 13ல் மகா கும்பமேளா துவங்கி, பிப்., 26ம் தேதி வரை, 45 நாட்கள் நடக்கிறது. பிரயாக்ராஜ் செல்ல கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக இரண்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.கொச்சுவேலியில் இருந்து கயாவுக்கு ஜன., 7, 21, பிப்., 4ம் ஆகிய தேதிகளில், ரயில் (எண்:06021) இயங்கும். நான்கு முதல் வகுப்பு, ஏழு இரண்டாம் வகுப்பு ஏ.சி., நான்கு முன்பதிவில்லா பொது பெட்டி உள்ளிட்ட, 17 பெட்டிகளை கொண்டதாக ரயில் இருக்கும். கொச்சுவேலியில் மதியம், 2:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் (புதன்) அதிகாலை, 1:17 மணிக்கு கோவைக்கும், 2:05 மணிக்கு திருப்பூருக்கும் வரும். வெள்ளி அதிகாலை, 1:30 மணிக்கு கயா சென்று சேரும். மறுமார்க்கமாக ஜன., 10, 24, பிப்., 7 ம் தேதி, கயாவில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் (எண்:06022) இயக்கப்படும்.கொச்சுவேலியில் இருந்து பனாரஸ் செல்ல பிப்., 17, 25 ம் தேதிகளில் சிறப்பு ரயில் (எண்:06007) இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக சிறப்பு ரயில் (எண்:06008) பிப்., 21, 28 ம் தேதிகளில், பனராஸில் இருந்து கொச்சுவேலி வந்தடைகிறது. இரு சிறப்பு ரயில்களும் கோவை, திருப்பூர், ஈரோடு ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.