மேலும் செய்திகள்
அடக்கமும் நிதானமும் வானளவு உயர்த்தும்
22-Dec-2025
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. நேற்று அவர் பேசியதாவது: பொது இடங்களில் தன்னிலை மறந்த செயல்களை, வார்த்தைகளை பிரயோகிக்க கூடாது. ஒருவரின் மனதை கெடுக்கும் வகையில், நம்முடைய செயல் இருக்க கூடாது. காமத்தை விட கொடியது கர்வம். கர்வத்தை விட மோசமானது கோபம். இந்த மூன்றையும் மனதால் அடக்கி வெல்லும் நிலையை பக்தியால் அடையலாம். பிறருக்கு தீங்கு விளைவிக்காத உள்ளத்தால், இறைவனை நினைத்த நேரத்தில் மனதால் உணரலாம். ஒருவருடைய குற்றங்களை, குறைகளை ஆராயமல், அவர்களிடத்தில் உள்ள நிறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். குணங்களால் உயர்ந்தவர்களின் வார்த்தைக்கு, என்றும் மதிப்பு கிடைக்கும். எல்லா நிலையிலும், இறைவனை வழிபட்டு வர வேண்டும். வெற்றி என்பது எளிதில் எல்லோருக்கும் கிடைக்கும் என்றால், இறைவனை யாரும் நினைக்க மாட்டார்கள். நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நாம் இன்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். நமக்கு நேரும் துன்பத்தை இறைவனை தவிர யாரிடமும் சொல்ல கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
22-Dec-2025