உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆளறிச்சான்று நடைமுறை பூசாரிகள் கோரும் மாற்றம்

ஆளறிச்சான்று நடைமுறை பூசாரிகள் கோரும் மாற்றம்

பல்லடம் : கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் வாசு, அறநிலையத்துறை கமிஷனருக்கு அனுப்பிய மனு:தமிழகம் முழுவதும், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம கோவில் பூசாரிகள், ஓய்வூதியம் பெறுவதற்கு, அறநிலையத்துறை உதவி கமிஷனர் மூலம் ஆண்டுதோறும் ஆளறிச் சான்று சமர்ப்பிக்க வேண்டும். வயது முதிர்ந்த பூசாரிகள் பலர், தாங்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளில் இருந்து, மாவட்ட தலைநகரங்களில் உள்ள உதவி கமிஷனர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதிக போக்குவரத்து செலவு, வீண் அலைச்சல் ஏற்படுகிறது. நடக்க இயலாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ள வயதான பூசாரிகள் சிரமப்படுகின்றனர்.உதவி கமிஷனர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இல்லாதபோது, தேவையின்றி அலைய வேண்டியுள்ளது. பிற துறைகளில் கடைபிடிக்கப்படுவது போல், தபால் அலுவலகங்களிலேயே ஆளறிச் சான்று பெறும் வசதியை அறநிலையத்துறை ஏற்படுத்தித் தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !