உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திருட்டு வழக்கில் சிறை: அப்பீல் மனு தள்ளுபடி 

 திருட்டு வழக்கில் சிறை: அப்பீல் மனு தள்ளுபடி 

திருப்பூர்: குன்னத்துார், ஆரம்ப சுகாதார மையத்தில் திருடிய சம்பவத்தில், பிறப்பிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய தாக்கல் செய்த அப்பீல் மனு மாவட்ட கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. குன்னத்துார், ஊத்துக்குளி ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. கடந்த 2018 பிப். மாதம் அதன் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்த நபர்கள் அங்கிருந்த 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப்களை திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், குன்னத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, அப்துல் ரகுமான், 34, ஜாபர் அலி, 30, அஜ்மல், 35 மற்றும் பைசல் ரகுமான், 30 ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு ஊத்துக்குளி ஜே.எம். கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. திருட்டில் ஈடுபட்ட நான்கு பேருக்கும் தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த 2014ல் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் அப்பீல் மனு அளித்தனர். அதன்படி திருப்பூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, நான்கு பேரின் அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்தும், ஜே.எம். கோர்ட் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து, உடனடியாக நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ