ரேஷன் திட்டத்துக்கு தனித்துறை: பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்: தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, கூட்டுறவுத்துறையில் உள்ள ரேஷன் திட்டத்துக்கு தனித்துறையை அறிவிக்க வேண்டும்.கூட்டுறவு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சிறப்பு முகாம் நடத்தி, முதியோரின் கைவிரல் ரேகை பதிவுகளை புதுப்பித்துக்கொடுக்க வேண்டும்.அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும். வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்களுக்கு தடையின்றி பொருட்கள் வழங்க, கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும். காலியாக உள்ள ரேஷன் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன பொதுசெயலாளர் ஜீவானந்தம், போராட்டத்தை விளக்கி பேசினார்.சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சம்பத், மாவட்ட செயலாளர் ரங்கராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் நிசார் அகமது உள்ளிட்டோர் பேசினர். செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.