உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியில் விளையாட்டு விழா; மாணவர்களுக்கு பரிசு

பள்ளியில் விளையாட்டு விழா; மாணவர்களுக்கு பரிசு

உடுமலை: கோமங்கலம் வித்யா நேத்ரா பள்ளியில், ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. விழாவில், பத்தாம் வகுப்பு மாணவி காவியாஸ்ரீ வரவேற்றார். சிறப்பு விருந்தினர் 'பன்பிட்' நிறுவன உடற்கல்வி இயக்குனர் சிவபாண்டிக்கு, மாணவன் திவ்யதேஜ், மாணவி திலோத்தமி நினைவு பரிசு வழங்கினர். மாணவ, மாணவியரின் அணிவகுப்பு நடந்தது. பள்ளி விளையாட்டு துறை செயலர் மாணவன் புவிநந்தன் தலைமையில், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஆண்டு விளையாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார். பள்ளித்தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவி மோகிதா நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை