பாட்டுப்பாடிய பேராசிரியர்
நிகழ்ச்சி இடையே கல்லுாரி ஆங்கிலத்துறை பேராசிரியர் மலர் மைக் பிடித்தார். மாணவி களுக்கு குறிப்புகள் சொல்வார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, 'தென்றல் வந்து தீண்டும் போது...' என்ற திரைப்பட பாடலை பாடினார். அவருடன் சேர்ந்து மாணவியரும் சேர்ந்து பாட ஆரம்பித்தனர். நிகழ்ச்சி களைகட்டியது. ''பள்ளியில் படிக்கும் போதே, பள்ளி விழாக்களில் மேடை ஏறி பாடுவேன். எனக்கு தமிழ் ஆர்வம் அதிகம். சிறு வயது முதல் மேடை ஏறி பாடுவதால், எனக்கு மேடை பயம் ஏற்படவில்லை. இது எனது படிப்பிற்க்கும், தற்போது பேராசிரியர் பணிக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது'' என்றார் மலர்.