மேலும் செய்திகள்
இச்சிப்பட்டியில் குப்பை கொட்ட அனுமதி ரத்து
01-Aug-2025
திருப்பூர்:பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன் (அ.தி.மு.க..) திருப்பூர் கலெக்டரிடம் நேற்று அளித்த மனு: பல்லடம் தொகுதி பரந்து விரிந்த, அதிக வாக்காளர் அடங்கிய பகுதி. பல்லடம் மற்றும் பொங்கலுார் பகுதிக்கு பில்லுார் திட்டத்தில் குடிநீர் வருகிறது. இதில் பல்லடம் நகராட்சிக்கு அனுமதிக்கப்பட்ட 6.41 எம்.எல்.டி.,க்குப் பதிலாக 3.90 எம்.எல்.டி.,யும் பொங்கலுார் ஒன்றியத்துக்கு 4.08 எம்.எல்.டி.,க்குப் பதிலாக 2.7 எம்.எல்.டி.,யும் தான் குடிநீர் வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதை சரி ெசய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சிப்பட்டியில் உள்ள பாறைக்குழிகளில் திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகழிவுகள் கொண்டு சென்று கொட்டப்படுவதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் எதிர்ப்பை மீறி அங்கு குப்பை கொட்டுவதை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது. பல்லடம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண கடந்த 2021ம் ஆண்டில், வெளி வட்டச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்த ரோடும் மாநில நெடுஞ்சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த திட்டத்தை மாற்றி 18 கி.மீ., துாரமாகவும், நகரை ஒட்டியும் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வீடுகள், விவசாய நிலம், கிணறு, வாய்க்கால் கோழிப்பண்ணை உள்ளிட்ட பல வகையான இழப்புகள் ஏற்படும். இத்திட்டத்தை கைவிட்டு முந்தைய திட்டப்படி இதை அமைக்க வேண்டும்.
01-Aug-2025