மாற்று பட்டா கேட்டு தாலுகா ஆபீசில் தர்ணா
திருப்பூர்; திருப்பூர், 15 வேலம்பாளையம், ரங்கநாதபுரத்தை சேர்ந்த பொதுமக்கள், திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் முன் அமர்ந்து, பட்டா வழங்க கோரி நேற்று 'தர்ணா'வில் ஈடுபட்டனர்.அப்பகுதியினர் கூறியதாவது:திருப்பூர், 15 வேலம்பாளையம், ரங்கநாதபுரத்தில், 106 குடும்பங்களுக்கு, கடந்த, 1984ல் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அப்போது முதல் அந்த இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். கடந்த, 2020ம் ஆண்டில், எங்களுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்துவிட்டனர். 2021ம் ஆண்டில், மாற்று பட்டா வழங்குவதாக தெரிவித்து, நில அளவை செய்தனர்.ஆனால், பட்டா வழங்கவில்லை. இதுதொடர்பாக, கலெக்டரிடம் தொடர்ந்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.தகவல் அறிந்து வந்த, வேலம்பாளையம் போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அதன்பின், தாலுகா அலுவலகத்தில் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.