மேலும் செய்திகள்
துணிப்பை வினியோகம்
15-Apr-2025
திருப்பூர், : திருப்பூர் அருகே, சக் ஷம் அமைப்பு சார்பில் செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திருப்பூர் சக் ஷம் அமைப்பு, திருப்பூர் ஆனந்தம் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. கடந்த மாதம் இதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது. இதில், தேர்வு செய்யப்பட்ட ஏழு பேருக்கு செயற்கை கால் மற்றும் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி அவிநாசிலிங்கம்பாளையம் டூடி ஓட்டல் வளாகத்தில் நடந்தது.சக் ஷம் அமைப்பு திருப்பூர் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, ஆனந்தம் ரோட்டரி சங்க தலைவர் உமாகாந்த் முன்னிலை வகித்தனர். மேலும் நிர்வாகிகள் பாஸ்கரன், தமிழ்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் சுரேஷ்பாபு உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இரு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
15-Apr-2025