உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்கல்

மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்கல்

திருப்பூர், ; தேசிய சட்ட உரிமை பாதுகாப்பு அமைப்பு சார்பில், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளிகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, தேசிய சட்ட உரிமை பாதுகாப்பு அமைப்பு சார்பில், லேப்டாப் வழங்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த பொதுத்தேர்வில் சாதித்த கே.எஸ்.சி. பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு லேப் - டாப் வழங்கப்பட்டது. அமைப்பின் தலைவர் ரபீக் தலைமை வகித்தார். பொது செயலாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். தேசிய செயலாளர் யுவராஜ், துணை தலைவர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, குமரன் நினைவிடத்தில் உள்ளகுமரன் சிலைக்கு மாலை அணிவித்து, நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை