உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானிய விலையில் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்

மானிய விலையில் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்

உடுமலை: குறிச்சிக்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான சோளம், உளுந்து, மக்காச்சோளம் விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. உடுமலை வேளாண் துறை, குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான சான்று பெற்ற விதைகள், சோளம்- கோ.32, உளுந்து - விபிஎன்-8, வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உடுமலை பகுதிகளில் பருவ மழை துவங்கியுள்ளதால், விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை