உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொதுமக்கள் அதிரடி ஒரே இரவில் தீர்வு

பொதுமக்கள் அதிரடி ஒரே இரவில் தீர்வு

பல்லடம், ;பல்லடம் நகராட்சி, 18வது வார்டுக்குட்பட்ட, வடுகபாளையம் பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட, 2.90 லட்சம் லிட்டருக்கு பதில், 1.60 லட்சம் லிட்டர் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய இப்பகுதி பொதுமக்கள், இன்று சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு, இதற்கான அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டு இருந்தனர். இதையடுத்து பில்லுார் பராமரிப்பு உப கோட்டத்தின் உதவி நிர்வாகப் பொறியாளர் ஜெயஸ்ரீ, நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ''பில்லுார் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், பல்லடம் நகராட்சிக்கு, சராசரியாக, 41 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில், வடுகபாளையம் பகுதிக்கு வழங்க வேண்டிய குடிநீர் அளவு தொடர்ந்து சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என, நகராட்சிக்கு கடிதம் வழங்கியுள்ளார். நேற்று இரவோடு இரவாக வடுகபாளையம் பகுதிக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீர் மேல் நிலைத் தொட்டியில் ஏற்றப்பட்டது. போராட்டம் அறிவித்திருந்த வடுகபாளையம் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி